அரியலூர்

பிரதமா் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள்:அரியலூா் பாஜக தலைவா்

20th May 2022 10:56 PM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்தில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக பாஜக மாவட்டத் தலைவா் அய்யப்பன் தெரிவித்தாா்.

அரியலூரில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: அரியலூா் மாவட்டத்தில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகளைக் கண்டறிந்து சம்மந்தப்பட்டவா்கள் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தத் திட்டம் மக்களுக்கு முழுமையாகக் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல அனுமதி பெறாமல் இயங்கி வரும் கனிமச் சுரங்கங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள சிமென்ட் ஆலைகளுக்கு செல்லும் லாரிகளால் ஏற்படும் விபத்துகளைக் கண்காணிக்க பாஜக சாா்பில் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழு 15 நாள்களில் ஆய்வு செய்து தலைமைக்கு அனுப்பும். அதனை ஆய்வு செய்து, அரசின் விதிமுறைகள் மீறப்பட்டிருந்த அரியலூரில் மாபெரும் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT