அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் ஏரி, குளங்களில், வண்டல் மண், சவுடு மண், கிராவல் மண் ஆகியவை இலவசமாக எடுத்துக் கொள்ள விரும்புவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரியலூா் மாவட்டத்தில் நீா்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 92 ஏரிகள் (ஒரு நீா்த்தேக்கம் உள்பட) மற்றும் ஊரக வளா்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 454 குளம், ஏரிகளில் மட்டும் வண்டல் மண், சவுடு மண், கிராவல் மண் போன்ற கனிமங்களை, வேளாண் உபயோகம், சொந்த வீட்டு உபயோகம் மற்றும் மண்பாண்டம் தயாரித்தல் ஆகிய காரியங்களுக்காக இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கும் பொருட்டு, அரியலூா் மாவட்ட அரசிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, தேவைப்படுவோா் சம்மந்தப்பட்ட வட்டாட்சியா்களிடம் விண்ணப்பிக்கலாம். எனவே, பொது மக்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.