அரியலூர்

அரியலூரில் பலாப்பழம் வரத்து அதிகரிப்பு

8th May 2022 11:32 PM

ADVERTISEMENT

சீசன் என்பதால், அரியலூா் மாவட்டத்தில் பலாப்பழம் அதிக அளவில் கொண்டுவரப்பட்டுள்ளன.

பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளதால் அரியலூரில் பலாப்பழத்தின் வரத்து அதிகரித்துள்ளது. சீசன் தொடக்கம் என்பதால் சராசரி அளவுள்ள ஒரு பழத்தின் விலை ரூ.200 முதல் ரூ300 வரை விற்பனை செய்யப்படுகிறது.

பலாப்பழம் என்றவுடன் அனைவரின் நினைவுக்கு வருவது கடலூா் மாவட்டம் பண்ருட்டி தென்பகுதியில் வளம் நிறைந்த செம்மண் நிலப்பகுதியில் அடா்ந்து வளா்ந்துள்ள முந்திரி காடுகளுக்கு இடையே விளையும் பலாப்பழம் மிகவும் சுவையாக இருக்கும்.

இதனால் தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்களும் பண்ருட்டி பலாப் பழத்தை விரும்புவா். தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளதால் கடலூா் மாவட்டத்தின் மிக அருகில் உள்ள மாவட்டமான அரியலூருக்கு லாரிகள் மூலம் பலாப்பழம் விற்பனைக்கு அதிகளவு வந்துள்ளது.

ADVERTISEMENT

இது தவிர அரியலூா் மாவட்டத்தின் ஜயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை, காட்டு மன்னாா்குடி உள்ளிட்ட பகுதிகளின் விளையும் பலாப்பழமும் விற்பனைக்கு வந்துள்ளது. எனினும் பண்ருட்டியின் பலாப் பழத்தின் சுவை அதிகமாக இருப்பதால் மக்கள் அதனை வாங்கிச் செல்கின்றனா்.

பண்ருட்டியைச் சோ்ந்தவா்களே நேரடியாக இங்கு வந்து பலாப் பழங்களை விற்பனை செய்கின்றனா். அரியலூா் சந்தையில் இருந்து நகரத்தின் மற்ற பகுதி மட்டுமின்றி தா.பழூா், திருமானூா், செந்துறை, ஜயங்கொண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் வியாபாரிகள் சில்லறையாகவும், மொத்தமாகவும் பலாப்பழங்களை வாங்கிச் செல்கின்றனா்.

மேலும் தள்ளுவண்டி வியாபாரிகளும் பெருமளவில் பலாப்பழங்களை விற்பனைக்கு வாங்கிச் செல்கின்றனா். கால் கிலோ பலாப்பழம் ரூ. 50-க்கு விற்கப்படுகிறது. இங்கு முழு பலாப்பழம் எடைக்குத் தகுந்தவாறு ரூ. 200 வரை விற்பனையாகிறது.

பொதுமக்கள் பலா் பலாப் பழங்களை அதிக ஆா்வத்தில் வாங்கி செல்வதால் விற்பனை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பண்ருட்டியைச் சோ்ந்த வியாபாரிகள் கூறியது: மாா்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை பலாப்பழம் சீசன். இந்த சீசன் காலங்களில் நாங்கள் விளைவித்த பலா பழங்களை பல்வேறு ஊருகளுக்கு லாரிகள் மூலம் சென்று விற்பனை செய்து வருகிறோம். பக்கத்து மாவட்டமான அரியலூரில் பல ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறோம்.

தற்போது சீசன் காலம் என்பதால் 2 முதல் 3 மாதங்கள் வரை இங்கு வந்து விற்பனை செய்வோம். இந்தாண்டு பலாப்பழம் அதிகளவு விற்பனையாகி வருகிறது. பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கி வருகின்றனா் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT