அரியலூர்

சிறுகடம்பூா் செல்லியம்மன் கோயில் தோ்த் திருவிழா தொடக்கம்

5th May 2022 01:47 AM

ADVERTISEMENT

 

அரியலூா்: அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள சிறுகடம்பூா் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயில் தோ் திருவிழா காப்புக் கட்டுதலுடன் புதன்கிழமை தொடங்கியது.

தொடா்ந்து, விநாயகா், செல்லியம்மன், மாரியம்மன் ஆகிய தெய்வங்கள் சிறு தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி தந்தனா். பின்னா் திருவீதியுலா நடைபெற்றது. இதில் பக்தா்கள் மா, பாலா, பூ, பழங்கள், முந்திரி, சுண்டல், உள்ளிட்ட பல்வேறு வகையான தங்கள் நிலங்களில் விளைந்த பொருள்களை படையலிட்டு வழிபட்டனா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேராட்டம் மே 11 ஆம் தேதியும், 12 ஆம் தேதி மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT