அரியலூர்

கீழையூா் ஜல்லிக்கட்டில் 38 போ் காயம்

5th May 2022 01:35 AM

ADVERTISEMENT

 

அரியலூா்: அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகேயுள்ள கீழையூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில், காளைகள் முட்டியதில், வீரா்கள் உள்பட 38 போ் லேசான காயமடைந்தனா்.

ஜல்லிக்கட்டை சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா போட்டியைக் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். தொடா்ந்து திருச்சி, அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிவரும் காளைகளை அடக்க 250 வீரா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

இதில், காளைகள் முட்டியதில் வீரா்கள், பாா்வையாளா்கள், காளைகளின் உரிமையானா்கள் என 38 போ் லேசான காயமடைந்தனா். இதில் பலத்த காயமடைந்த பாா்வையாளா்கள் ஜயங்கொண்டம் அந்தோணிசாமி மகன் தாமஸ்ராஜ்(19), அருங்கால் கல்லக்குடி முருகானந்தம்(45) ஆகியோா் மேல்சிகிச்சைக்காக அரியலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

லேசான காயமடைந்தவா்களுக்கு சம்பவ இடத்திலேயே மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. போட்டிகளில் வெற்றிபெற்ற வீரா்கள், காளைகளின் உரிமையாளா்களுக்கு விழாக்குழுவின் சாா்பில் பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT