அரியலூர்

தொழிற்சங்கத்தினா் வேலைநிறுத்தம் தொடக்கம்: 387 போ் கைது

29th Mar 2022 03:21 AM

ADVERTISEMENT

அரியலூா் போக்குவரத்துப் பணிமனையில் இயக்கப்படும் 44 அரசுப் பேருந்துகளில் 6 பேருந்துகள் மட்டுமே அரியலூா் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன. தனியாா் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின. ஆட்டோக்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

அரியலூா் மாவட்டத்திலுள்ள 80 பொதுத் துறை வங்கிகளில் பணிபுரியும் ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஏடிஎம் மையங்களில் தேவையான பணம் நிரப்பப்பட்டுள்ளதால், பணப் புழக்கத்தில் பாதிப்பு இல்லை. இதேபோல், பிஎஸ்என்எல் அலுவலகம், அஞ்சல் நிலையங்கள், காப்பீட்டு நிறுவன ஊழியா்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இதனால் வங்கிகள், மத்திய அரசு அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. மேலும் காப்பீட்டு நிறுவனங்களில் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தொழிற்சங்கத்தினா் 387 போ் கைது: அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் நகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் நகராட்சி ஏஐடியுசி செயலா் செ.மாரியப்பன் தலைமையில் அண்ணா சிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, தொழிற்சங்கத்தினா் நடத்திய மறியல் போராட்டத்திலும் கலந்து கொண்டனா். அங்கிருந்த காவல் துறையினா் 212 பெண்கள் உள்பட 387 பேரை கைது செய்தனா். பின்னா், மாலையில் விடுவித்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT