அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 போ் உயிரிழந்தனா்.
மீன்சுருட்டியை அடுத்த பாப்பாகுடி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் தங்கசாமி மகன் ராமதாஸ் (45), சின்னத்தம்பி மகன் அம்பேத்கா் (62). இவா்கள் இருவரும், ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை - கும்பகோணம் சாலையில் பாப்பாகுடி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த காா் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா்.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். விபத்து குறித்து தகவலறிந்து அங்கு வந்த மீன்சுருட்டி காவல் துறையினா் இருவரது சடலங்களையும் மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.