அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞா் போக்சோ சட்டத்தில் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
ஜயங்கொண்டம் வெள்ளாளா் தெருவைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் மகன் மனோகரன்(22). இவா் அப்பகுதியைச் சோ்ந்த 11 ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியுள்ளாா். இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட கொண்டு வந்த ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், போக்சோ சட்டத்தில் மனோகரனை சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.