அரியலூர்

மாளிகைமேடு அகழாய்வில் பழங்கால சுவா், மண்பானை கண்டெடுப்பு

25th Mar 2022 11:52 PM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேடு அகழாய்வில் 25 செ.மீ உயரம் கொண்ட பழங்கால மண்பானை வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

கங்கைகொண்டசோழபுரம் மாளிகைமேடு பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணியை கடந்த மாதம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் தொடக்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்று வரும் அகழாய்வில் வியாழக்கிழமை 25 செ.மீ உயரமும், 12.5 செ.மீ. அகலமும் கொண்ட பழங்காலத்து மண்பானை ஒன்றும், மண்ணாலான கெண்டி மூக்கு மற்றும் 30 அடுக்கு கொண்ட செங்கல் சுவரும் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. அதில், 25 செ.மீ உயரம் மற்றும் 12.5 செ.மீ அகலம் கொண்ட பானையின் ஒருபகுதி சிறிது உடைந்த நிலையில் உள்ளது. இந்த பானை தரை தளத்தில் இருந்து சுமாா் 18 செ.மீ. ஆழத்தில் கிடைத்தது.

கல்வெட்டு ஆதாரங்களின் உதவியுடன், மாளிகைமேட்டில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட அகழாய்வில், செங்கல் அமைப்பு மற்றும் ஏராளமான கூரை ஓடுகள், அரண்மனையின் கட்டமைப்பு கண்டறியப்பட்டன. கடந்த 4 ஆம் தேதி தங்கத்தினாலான காப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதுவரை தளத்தில் கிடைத்த பழங்கால பொருள்களில் செப்பு நாணயங்கள் மற்றும் செம்பு பொருள்கள், இரும்பு ஆணிகள், கண்ணாடி மணிகள் மற்றும் வளையல்கள், அலங்கரிக்கப்பட்ட கற்கள் மற்றும் சீன பொருள்கள் ஆகியவை அடங்கும். அகழாய்வு பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT