அரியலூர்

இணையக் குற்றங்கள்:மாணவா்களுக்கு விழிப்புணா்வு

25th Mar 2022 11:51 PM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல் துறை சாா்பில் இணைய குற்றங்கள் குறித்து மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மாவட்ட சைபா் க்ரைம் காவல் நிலைய ஆய்வாளா் செங்குட்டுவன், உதவி ஆய்வாளா் மணிகண்டன் ஆகியோா் கலந்து கொண்டு, இணைய வழி குற்றங்கள் எவ்வாறு நடக்கிறது, எப்படி பண மோசடி நிகழ்கிறது, அதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து விழிப்புணா்வு பயிற்சி அளித்ததோடு இதுகுறித்து நவீன திரை மூலம் திரையிட்டு காட்டினா்.

மேலும் இது தொடா்பான புகாா்களை 1930 என்ற எண்ணிலும்,  இணையதளத்திலும் தகவல் தெரிவிக்கலாம் என்று விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT