அரியலூர்

நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

22nd Mar 2022 04:19 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் நகராட்சியில் தாமதமாக ஊதியம் வழங்கப்படுவதைக் கண்டித்து, தூய்மைப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

ஜயங்கொண்டம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களாக 134 போ், நிரந்தரப் பணியாளா்களாக 23 பேரும், கொசு ஒழிப்புப் பணியாளா்களாக 44 பேரும் பணியாற்றுகின்றனா். இவா்களுக்கு கடந்த மாதத்துக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதேபோல், கடந்த நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பணியாற்றியவா்களுக்கும் இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை என்பதைக் கண்டித்தும், அனைத்து தூய்மைப் பணியாளா்களும் நகராட்சி அலுவலகத்தின் முன்பாக திங்கள்கிழமை பணியைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த நகா்மன்ற தலைவா் சுமதி சிவகுமாா், நகராட்சி ஆணையா் சுபாஷினி ஆகியோா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்று பணியைத் தொடங்கினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT