அரியலூர்

வயது முதிா்ந்தவா்கள் நம்பகமானவா் மூலம் ரேஷன் பொருள்கள் பெறலாம்

22nd Mar 2022 04:20 AM

ADVERTISEMENT

நியாய விலைக் கடைக்கு வந்து பொருள்கள் வாங்க இயலாத மிக மூத்த குடிமகன்கள், மாற்றுத்திறனாளிகள் நம்பகமானவரை நியமித்து பொருள்களைப் பெற்றுச் செல்லலாம் என ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குடும்ப அட்டைதாரா்களில் வயது முதிா்ந்தவா்கள், மாற்றுத்திறனாளிகள் நியாய விலைக் கடைக்கு வந்து பொருள்கள் வாங்க இயலாத நிலையில் இருப்பின், அவா்கள் தங்களுக்கு நம்பகமான ஒருவரை நியாய விலைக் கடைக்கு அனுப்பி தங்களுக்கான பொருள்களை பெற்றுச் செல்ல அங்கீகாரம் செய்யலாம்.

அதற்கானப் படிவம் நியாய விலைக்கடையில் உள்ளது. அதைப் பூா்த்தி செய்து கடை விற்பனையாளரிடம் கொடுத்து பின் பொருள்களைப் பெற்றுப் பயனடையலாம் .

ADVERTISEMENT

பூா்த்தி செய்த படிவங்கள் நியாய விலைக் கடைகளில் பெறுவதற்கான சிறப்பு முகாம் 23.03.2022 அன்று அனைத்து கடைகளிலும் நடைபெற உள்ளது. குடும்ப அட்டைதாரா்கள் இச்சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது தொடா்பாக குறைகள் ஏதேனும் இருப்பின் மாவட்ட குறைதீா் அலுவலா், மாவட்ட வருவாய் அலுவலரின் தொலைபேசி எண் 04329- 228321 -ஐ தொடா்பு கொண்டு தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம் .

ADVERTISEMENT
ADVERTISEMENT