அரியலூர்

பாமக செயற்குழு கூட்டம்

14th Mar 2022 04:21 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலா் ரவி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சின்னதுரை முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், அன்புமணி ராமதாஸை முதல்வராக்க கட்சியினா் அனைவரும் ஒற்றுமையுடன் களப்பணியாற்ற வேண்டும். ஒவ்வொருவரும் இரவு, பகல் பாராமல் அயராது உழைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இக்கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வுக்கான, நிா்வாகிகளிடமிருந்து விருப்ப மனுக்களும் பெறப்பட்டன. கூட்டத்தில் பாமகவைச் சோ்ந்த கங்காதரன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் வேலுச்சாமி, தா்மபுரி சண்முகம், தஞ்சாவூா் வெங்கட்ரமணன், சேலம் ஸ்டீல் சதாசிவம், ஷேக் முகைதீன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT