அரியலூர்

உளுந்து சாகுபடி பயிற்சி

10th Mar 2022 01:28 AM

ADVERTISEMENT

 

அரியலூா்: அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த தளவாய் கிராமத்தில், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் விவசாயிகளுக்கு உளுந்து சாகுபடி பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.

மாவட்ட வேளாண் துணை இயக்குநா் பழனிச்சாமி தலைமை வகித்து, உளுந்து சாகுபடி செய்வதன் அவசியம், அதன் பயன்பாடு, மண்ணிண் மேலாண்மை குறித்துப் பேசினாா். பயிற்சிமுகாமில், வேளாண் உதவி இயக்குநா் ஜென்சி முன்னிலை வகித்து, வேளாண் துறையால் வழங்கப்படும் உளுந்து பயிருக்கான மானியம், திரவ உயிா் உரங்களின் பயன்பாடுகள், பயறு வகை நுண்ணூட்டம் பற்றி எடுத்துக் கூறினாா்.

இந்தப் பயிற்சியில் ஊராட்சித் தலைவா்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலா்கள் ஆனந்தி, ஒளிச்செல்வி ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT