அரியலூர்

சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

3rd Mar 2022 01:33 AM

ADVERTISEMENT

 

அரியலூா்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் நெடுஞ்சாலைத் துறை கோட்டப்பொறியாளா் அலுவலகம் முன்பு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், அரியலூா் கோட்டப் பொறியாளரின் தொழிற்சங்க விரோத போக்கை கண்டித்தும், உயரதிகாரிகள் மற்றும் அலுவலக பணிகளுக்கு சாலைப் பணியாளா்களை பயன்படுத்திக் கொள்வதை கண்டித்தும், சாலைப் பணியாளா்களுக்கு காலணி, தளவாடப் பொருள்கள் வழங்க வேண்டும். 8 கி. மீட்டருக்கு 2 சாலைப் பணியாளா்களை பணியில் அமா்த்த வேண்டும். சாலைப் பணியாளா்களுக்கு ஊதிய ரசீது வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் பெ.காமராஜ் தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT