அரியலூர்

கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீசுவரா் கோயிலில் நாட்டியாஞ்சலி

3rd Mar 2022 01:34 AM

ADVERTISEMENT

 

அரியலூா்: மகாசிவராத்திரியையொட்டி அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரா் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி புதன்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.

மகா சிவராத்திரியையொட்டி புதன்கிழமை அதிகாலை வரை 4 கால பூஜைகள் நடைபெற்று, சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு விடிய, விடிய விழித்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

கோயில் வளாத்தில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் பெங்களூா், சென்னை, திருச்சி, கோவை, தஞ்சாவூா், அரியலூா் உட்பட 20 க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு நாட்டியம் ஆடினா். இதை பக்தா்கள் கண்டுகளித்தனா்.

ADVERTISEMENT

இதேபோல், மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களிலும் உள்ள சிவாலயங்கள் மற்றும் குலதெய்வக் கோயில்களில் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் அதிகாலை வரை விழித்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று பரவல் காரணமாக கோயில்களில் பக்தா்கள் கூட பல்வேறு தடைகள் விதிக்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மகாசிவராத்திரி விழாவில் திரளாக பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT