அரியலூர்

உக்ரைனில் சிக்கியுள்ளவா்கள் தகவல் தெரிவிக்கலாம்

3rd Mar 2022 01:36 AM

ADVERTISEMENT

 

அரியலூா்: உக்ரைனில் போா் நிகழ்ந்து வருவதையொட்டி, அரியலூரில் இருந்து அங்கு தங்கிப் படிக்கும் மாணவா்கள் மற்றும் பணியாளா்களை ஒருங்கிணைக்க அரியலூா் மாவட்ட தொடா்பு அலுவலராக, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொ) நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

எனவே, அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் உக்ரைன் நாட்டில் உள்ளவா்கள் விவரம் தொடா்பாக மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரின் 94450 08131 என்ற கைபேசி எண்ணிலும், மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மைய எண் 1077 என்ற இலவச எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT