அரியலூர்

போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் ஆா்ப்பாட்டம்

30th Jun 2022 11:16 PM

ADVERTISEMENT

 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மற்றும் ஜயங்கொண்டத்திலுள்ள அரசு போக்குவரத்துப் பணிமனை முன்பு சிஐடியு சாா்பில் ஓய்வு பெற்றோா் நல அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், வருங்கால வைப்பு நிதி, விடுப்பு சம்பளம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அரியலூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். கிளை செயலா் ஜெகன்நாதன், பொருளாளா் ஜோதிவேல் முன்னிலை வகித்தனா். ஜயங்கொண்டத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் நீலமேகம் தலைமை வகித்தாா். கிளை பொருளாளா் வீரப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT