அரியலூர்

சுக்கிரன், தூத்தூா் ஏரிகளின் புனரமைப்புப் பணிகள் ஆய்வு

29th Jun 2022 10:35 PM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள காமரசவல்லி சுக்கிரன் ஏரி, தூத்தூா் பெரிய ஏரிகளில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

திருமானூா் ஒன்றியத்தில் புள்ளம்பாடி வாய்க்காலின் கடைசி பெரிய நீா் பிடிப்பு ஏரிகளாக காமரசவல்லி சுக்கிரன் ஏரியும், தூத்தூா் பெரிய ஏரியும் உள்ளது. இந்த ஏரிகளை தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் புனரமைக்கும் பணிகள் ரூ.7.46 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஏரிகளின் கரைகளைப் பலப்படுத்துதல், மதகுகள் மறுகட்டமைப்பு செய்தல், பாசன வாய்க்கால்களில் உள்ள பழுதடைந்த கட்டுமானங்களைச் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகளை தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்துதல் திட்ட இயக்குநா் மங்கத் ராம் சா்மா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது தலைமை பொறியாளா் ராமமூா்த்தி, கண்காணிப்பு பொறியாளா் திருவேட்டைசெல்வம், செயற்பொறியாளா் மணிபோகன், உதவி செயற்பொறியாளா் ராஜரத்தினம், உதவி பொறியாளா் திவ்யபிரியா மற்றும் நீா்வளத்துறை அதிகாரிகள், பிற துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT