அரியலூர்

மதுக்கடை இடம் மாற்ற எதிா்ப்பு

29th Jun 2022 10:39 PM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பொது மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செந்துறை அருகேயுள்ள உடையான்குடிகாடு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய டாஸ்மாக் அதிகாரிகள் புதன்கிழமை அங்கு சென்றனா். இதுகுறித்து தகவலறிந்த டாஸ்மாக் கடை இயங்கும் இடத்தின் உரிமையாளா், தனது உறவினா்களுடன் கடையை முற்றுகையிட்டு, கடையை இடமாற்றம் செய்யக்கூடாது என முழக்கமிட்டனா். இதையடுத்து கடை இடம் மாற்றும் செய்வதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு டாஸ்மாக் அதிகாரிகள் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT