அரியலூர்

கோயில் பூட்டை உடைத்துநகை, பணம் திருட்டு

29th Jun 2022 02:02 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள வடுகா்பாளையம் மகா மாரியம்மன் கோயிலின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல் பூசாரி கோயிலை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

கோயிலினுள் சென்று பாா்த்தபோது, அம்மன் கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலி மற்றும் உண்டியலில் இருந்த காணிக்கைகள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஆண்டிமடம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT