அரியலூர்

விமானம் விழுந்ததாக பரப்பப்படும் தகவல்களை நம்ப வேண்டாம்அரியலூா் ஆட்சியா்

29th Jun 2022 02:01 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே குழுமூா் மற்றும் வங்காரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு வனக்காட்டில் செவ்வாய்க்கிழமை திடீரென அதிக சப்தம் கேட்டதாகவும், ராணுவ விமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதாகவும், அரியலூா் மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் விசாரணை செய்ததில், மேற்கண்ட தகவல் தவறானது என கண்டறியப்பட்டுள்ளது. அரியலூா் மாவட்டத்தின் எந்த பகுதியிலும் விமான விபத்து ஏற்படவில்லை என இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தவறாக பரப்பப்படும் தகவல்களை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். அதேபோல், தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் யாரும் பரப்ப வேண்டாம் என ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT