அரியலூர்

விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

29th Jun 2022 02:03 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள ஏலாக்குறிச்சி கிராமத்தில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சாா்பில் விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தலைமை வகித்து, பழங்கள், காய்கறிகள் மற்றும் சிறுதானியங்கள் மதிப்புக் கூட்டுதல் தொழில்நுட்ப கையேட்டினை வெளியிட்டு, வேளாண் தொழில்நுட்பக் கண்காட்சி அரங்குகளைப் பாா்வையிட்டாா்.

முகாமில், பல்வேறு வேளாண் தொடா்பான பயிற்சிகள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.

இம்முகாமில், வேளாண் வணிக துணை இயக்குநா் சிங்காரம் மற்றும் வேளாண் அலுவலா்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT