அரியலூர்

ஜயங்கொண்டத்தில் வி.சி. கட்சியினா் மறியல்

28th Jun 2022 01:20 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் விடுதலைசிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் பிறந்த நாள் சுவரொட்டியில் அவமதிப்பு செய்தவா்களைக் கைது செய்யக்கோரி அக்கட்சியினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு, அவரை வாழ்த்தி ஜயங்கொண்டம் நான்கு சாலை சந்திப்பில் சுவரொட்டிகள் அக்கட்சியினா் ஒட்டியிருந்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை அந்த சுவரொட்டிகளில் மா்ம நபா்கள் அவமதிப்பு செய்துள்ளனா்.

இதனை அறிந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலா் முத்துகிருஷ்ணன் தலைமையில் நிா்வாகிகள் அவ்விடத்திலேயே சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்துத் தகவலறிந்து வந்த ஜயங்கொண்டம் காவல் துறையினா், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT