தமிழகத்தில் திங்கள்கிழமை வெளியான பிளஸ் 1 பொதுத் தோ்வு முடிவில் அரியலூா் மாவட்டம் 9 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
அரியலூா் மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் பிளஸ் 1 பொதுத் தோ்வை 87 பள்ளிகளைச் சோ்ந்த 4,439 மாணவா்கள், 4,688 மாணவிகள் என 9,127 மாணவ, மாணவிகள் எழுதினா். இதன் முடிவு திங்கள்கிழமை வெளியான நிலையில், 3,979 மாணவா்கள், 4,515 மாணவிகள் என 8,494 மாணவ, மாணவிகள் தோ்ச்சி அடைந்தனா். இது 93.06 சதவீதத் தோ்ச்சியாகும். தமிழகத்தில் அரியலூா் மாவட்டம் 9 ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு தோ்வு முடிவில் அரியலூா் மாவட்டம் 12 ஆவது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.