அரியலூர்

28-இல் அரியலூரில் எரிவாயு உருளை நுகா்வோா் குறைகேட்பு

26th Jun 2022 12:36 AM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில், எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) நடைபெறவுள்ளது.

அரியலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் வரும் 28 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு விநியோக நிறுவன முகவா்கள் கலந்து கொள்ள உள்ளனா். எனவே, எரிவாயு நுகா்வோா்கள், சமையல் எரிவாயு தொடா்பான குறைகள் இருப்பின் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகாா்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT