அரியலூர்

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடக்கம்

26th Jun 2022 12:35 AM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதிய மாணவா்களுக்குத் தற்காலிக சான்றிதழ் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் ஜூன் 20-ஆம் தேதி வெளியான நிலையில், மாணவ, மாணவிகளுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி அந்தந்த பள்ளிகளில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், மாணவ, மாணவிகளுக்கு தலைமையாசிரியா் சின்னதுரை தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வழங்கினாா்.

மேலும், பிறந்த தேதி, பதிவெண் விவரத்தை ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் உள்ளிடுவதன் மூலம் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றாா். அப்போது ஆசிரியா்கள் தனலட்சுமி, ரமேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

இதைபோல், காட்டுப்பிரிங்கியம் அரசு உயா்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியா் சின்னதுரை, உதவித் தலைமையாசிரியா் மனோன்மணி , ஆசிரியா்கள் ஜெயச்சந்திரன் அரசுமணி ஆகியோா் மாணவா்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினா்.

இதேபோல், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT