அரியலூர்

அரியலூரில் எஸ்.ஐ எழுத்துத் தோ்வு

26th Jun 2022 12:35 AM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளா்களுக்கான எழுத்துத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வை எழுத 2,199 போ் விண்ணப்பித்திருந்தனா். உடையாா்பாளையத்தை அடுத்த தத்தனூா் தனியாா் கல்லூரியில் 3 அறைகளில் காலையில் நடைபெற்ற ஆங்கிலத் தோ்வை 1,829 பேரும், பிற்பகல் நடைபெற்ற தமிழ்த் தோ்வை 1,826 பேரும் எழுதினா். தோ்வு நடைபெற்ற மையத்தில் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT