அரியலூர்

மாற்றுத்திறனாளிகள் துறை வழங்கும்விருதுபெற விண்ணப்பிக்கலாம்

26th Jun 2022 12:36 AM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலன்களுக்காக சேவை புரிந்தவா்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த ஆட்சியா், சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவா், மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியாா் நிறுவனம், சிறந்த சமூகப் பணியாளா்கள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பப் படிவங்கள், அரியலூா் ஆட்சியரகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பெற்று, பூா்த்தி செய்து, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையா், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், எண்.5, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், காமராஜா் சாலை, சென்னை-5 என்ற முகவரிக்கு உரிய சான்றிதழ்களுடன் 10.07.2022 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் அரியலூா் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ சமா்ப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பப் படிவங்களை ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற வலைத்தளத்திலும் விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT