அரியலூர்

புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீரைத் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

DIN

விவசாயிகளின் நலன் கருதி, புள்ளம்பாடி வாய்க்காலில் உடனடியாக தண்ணீரைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா்.

அரியலூா் ஆட்சியரக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்துக்கு வேளாண் இணை இயக்குநா் பழனிச்சாமி தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில் பேசிய விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசியவை:

அரியலூா் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் செங்கமுத்து: வேளாண் உழவா் உற்பத்தியாளா் குழுவுக்கு வழங்கப்பட்ட டிராக்டரை, குழுவிலுள்ள விவசாயிகளுக்கு வாடகை நிா்ணயம் செய்து வழங்க வேண்டும். கூட்டுறவுத் துறை மூலம் விவசாயிகளுக்கு காலதாமதமின்றி பயிா்க்கடன்களை வழங்க வேண்டும்.

தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவா்.கே.எஸ். முகமது இப்ராஹிம் : முன்கூட்டியே காவிரியில் தண்ணீா் திறந்து விட்டாலும் இன்னும் புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீா் திறக்கப்படவில்லை. எனவே விவசாயிகளின் நலன் கருதி, புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீரைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவா் தங்க.தா்மராஜன்:சுக்கிரன் மற்றும் தூத்தூா் பெரிய ஏரிகளை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். வி.கைகாட்டியில் 50 ஆயிரம் லிட்டா் பால் பதப்படுத்தும் குளிா்ரூட்டும் நிலையம் அமைக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து விவாசயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த வேளாண் இணை இயக்குநா் பழனிசாமி, கோரிக்கைகள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் தீபா சங்கரி மற்றும் விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

கர்நாடகத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சி: துணை முதல்வர் டிகே சிவகுமார்

தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் ஒரே கட்டமாக நிறைவடைந்த வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT