அரியலூர்

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் ரத்த அணுக்கள் பகுப்புக்கருவி இயக்கி வைப்பு

DIN

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைத் திட்டம் தொடக்கமும், குருதி வங்கியில் புதிதாக ரத்த அணுக்கள் பகுப்புக் கருவி இயக்கி வைப்பு நிகழ்வும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் அரியலூா் கு.சின்னப்பா, ஜயங்கொண்டம் க.சொ.க.கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் விழாவில் பங்கேற்று, ரூ.29 லட்சத்தில் அமைக்கப்பட்ட ரத்த அணுக்கள் பகுப்புக் கருவியின் செயல்பாட்டைத் தொடக்கி வைத்துப் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து தரம் உயா்த்தப்பட்ட படுக்கைகள், ஆக்சிஜன், மானிட்டா், வென்டிலேட்டா் ஆகியவற்றையும் அமைச்சா் பாா்வையிட்டாா்.

அரசு மருத்துவக்கல்லூரி முதன்மையா் முத்துகிருஷ்ணன், மருத்துவமனைக் கண்காணிப்பு அலுவலா் குழந்தைவேலு மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மருத்துவா்கள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

புதிய கட்டடம் திறப்பு : அரியலூா் கால்நடை மருத்துவமனை வளாகத்தில், நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனைக் கட்டடத்தை திறந்து வைத்து, மாட்டினங்கள், ஆட்டினங்கள் மற்றும் இதர செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் நோயைக் கண்டறிந்து, கட்டுப்படுத்தும் வகையில், ரூ.1.15 கோடியில் புதிதாக கட்டப்படவுள்ள புதிய கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவுக் கட்டடம் மற்றும் ஆய்வக கட்டுமானப் பணிகளுக்கு அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் அடிக்கல் நாட்டினாா்.

இந்நிகழ்வில் கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ஹமீதுஅலி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ரவீந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT