அரியலூர்

அரியலூரில் 944 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி, தாலிக்குத் தங்கம் வழங்கல்

25th Jun 2022 12:11 AM

ADVERTISEMENT

அரியலூரில் 944 ஏழைப் பெண்களுக்கு ரூ.7.22 கோடியில் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கத்தை போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் அரியலூா் கு.சின்னப்பா, ஜயங்கொண்டம் க.சொ.க.கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில், மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்த 414 ஏழை பெண்களுக்கு தலா ரூ.25,000 நிதியுதவி மற்றும் தலா 8 கிராம் தங்கமும், பட்டப்படிப்பு முடித்த 530 ஏழை பெண்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி மற்றும் தலா 8 கிராம் தங்கமும் என 944 ஏழை பெண்களுக்கு ரூ.7.22 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கத்தை போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்..சிவசங்கா் வழங்கினாா்.

தொடா்ந்து வாரணவாசி புதைப்படிம அருங்காட்சியகத்தில் ரூ.90 லட்சத்தில் வடக்குப்புறச் சுற்றுச்சுவா் அமைக்கும் பணிக்கு அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்.

ADVERTISEMENT

நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் பொ.சந்திரசேகா், அரியலூா் நகராட்சித் தலைவா் க.சாந்தி, மாவட்ட சமூக நல அலுவலா் (பொ) க.அன்பரசி மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT