அரியலூர்

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு

21st Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூரில் போக்குவரத்து காவல் துறையினா் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை பொதுமக்களிடம் திங்கள்கிழமை ஏற்படுத்தினா்.

அரியலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேசன் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி, சாலை விதிகளை அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். தலைக்கவசம் கட்டாயம் அணிந்து இருந்து சக்கர வாகனங்களை இயக்க வேண்டும். இதேபோல் சீட் பெல்ட் அணிந்து தான் நான்கு சக்கர வாகனங்களை இயக்கவ வேண்டும் என்று தெரிவித்தாா். இந்நிகழ்ச்சியில், அரியலூா் நகர காவல் நிலைய ஆய்வாளா் கோபிநாத், நகர போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளா் காா்த்திகேயன் மற்றும் காவல் துறையினா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT