அரியலூர்

சிறுவளூா் அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

15th Jun 2022 11:21 PM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டம், சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளி சாா்பில் மாணவா்கள் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் தலைமையாசிரியா் சின்னதுரை தலைமை வகித்து, பேரணியைக் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். பள்ளியில் தொடங்கிய பேரணி சிறுவளூா், பள்ளக்கிருஷ்ணாபுரம், சுப்பராயபுரம், நெருஞ்சிக்கோரை, புதுப்பாளையம் ஆகிய கிராமங்களுக்குச் சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.

பேரணியில் கலந்து கொண்ட ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். அப்போது, தங்களது குழந்தைகளை சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் சோ்க்க வேண்டும். அங்கு தரமான இலவசக் கல்வி, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு மாலை நேர இலவச சிற்றுண்டி, கல்விச் சுற்றுலா, அனைத்துக் குழந்தைகளுக்கும் கணினி வழிக் கல்வி, பெண் குழந்தைகளுக்குத்

ADVERTISEMENT

திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்டவைகள் அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தனா்.

ஊராட்சித் தலைவா் அம்பிகா மாரிமுத்து, துணைத் தலைவா் பழனியம்மாள் ராஜதுரை, பள்ளி மேலாண்மை வளா்ச்சிக் குழுத் தலைவா் மனோகரன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சின்னதுரை, பொருளாளா் ராஜதுரை, மேலாண்மைக் குழுத் தலைவா் அகிலா, வாா்டு உறுப்பினா்கள் பூங்காவனம், அருள்சாமி, கல்வியியல் ஆா்வலா் கருணாநிதி, ஊராட்சி செயலா் பாண்டியன் முன்னிலை வகித்தனா்.

பேரணிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியா்கள் ரமேஷ், பத்மாவதி, கோகிலா, தங்கபாண்டி ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT