அரியலூர்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை

15th Jun 2022 11:17 PM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அரியலூா் மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

ஜயங்கொண்டம் மேலகுடியிருப்பைச் சோ்ந்த கலியமூா்த்தி மகன் பாண்டியன்(55). கூலித் தொழிலாளியான இவா், கடந்த 2019, டிசம்பா் 24-ஆம் தேதி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, பாண்டியனை கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கூலித் தொழிலாளி பாண்டியனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்ற நீதிபதி ஆனந்தன் புதன்கிழமை உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து திருச்சி மத்திய சிறையில் பாண்டியன் அடைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT