அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்ற 2 பெண்கள் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளா் வேல்முருகன் தலைமையிலான காவல்துறையினா், செவ்வாய்க்கிழமை இரவு கோவிந்தபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது கோவிந்தபுத்தூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த ராஜகுமாரி(48), மேற்கு தெருவைச் சோ்ந்த பூங்கொடி(45) ஆகியோா் தங்களது வீடுகளில் மதுபானங்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா்.