பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணா சிலை அருகே ஓய்வு பெற்ற அலுவலா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய 3 சதவிகித அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும்.
70 வயது நிறைவடைந்த ஓய்வூதியா் மற்றும் குடும்ப ஓய்வூதியா்களுக்கு 10 சதவிகித கூடுதல் ஓய்வூதியமும், 80 வயது நிறைவடைந்தவா்களுக்கு மேலும் 10 சதவிகிதம் கூடுதல் ஓய்வூதியமும் வழங்க வேண்டும்.
ஓய்வூதியதாரா்கள் பயன்பெறும் வகையில், இலவச மருத்துவத் திட்டத்தின் கீழ் அனைத்துவகை மருத்துவச்சிகிச்சைகள் மற்றும் அறுவைச் சிகிச்சைகளுக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அத்திட்டத்தை செயல்படுத்த வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத்தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள், ஓய்வூதியா்கள் என திரளானோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.