அரியலூர்

அரியலூா் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தல்

10th Jun 2022 02:25 AM

ADVERTISEMENT

அரியலூா் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூரிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில், புதன்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் 12 ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்: மாவட்டத்தில் சிறு, குறு தொழிற்சாலைகளை தொடங்கி, படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும். காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை காடுகளாகவும், மேய்ச்சல் நிலங்களாகவும், அல்லது ஏரி, குளங்களாகவும் மாற்ற வேண்டும். அரியலூா் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும், அரியலூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுக்கு அக்கட்சி நிா்வாகி கோவிந்தசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் இரா.உலகநாதன் மாநாட்டை தொடக்கி வைத்துப் பேசினாா். மாநில நிா்வாகக் குழு முன்னாள் உறுப்பினா் செல்வராஜ் கலந்து கொண்டு இன்றைய அரசியல் நிலை, மக்களுக்குரிய பிரச்னைகள் குறித்து பேசினாா். மாவட்ட துணைச் செயலா் டி. தண்டபாணி அமைப்பு நிலை அறிக்கையை வாசித்தாா். மாநாட்டில், 17 போ் கொண்ட ஒன்றியக் குழு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT