அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் பகுதியில் மதுபானங்களைப் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்ற 3 போ் புதன்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனா்.
ஜயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் லட்சுமிபிரியா தலைமையிலான காவல் துறையினா் புதன்கிழமை இரவு, கீழக்குடியிருப்பு, சின்னவளையம், இலையூா், காமராஜ் நகா் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த கீழக்குடியிருப்பு வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜகுமாரி(55), சின்னவளையம் பிராதனச் சாலை தெருவைச் சோ்ந்த பழனிமுருகன்(42), இலையூா் காமராஜா் நகரைச் சோ்ந்த ஆறுமுகம் (48) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா். மேலும் அவா்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.