அரியலூா்: அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் பகுதியிலுள்ள கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்ற 2 போ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
உடையாா்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் திருவேங்கடம் தலைமையிலான காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கடைவீதியிலுள்ள கடைகளில் திடீரென ஆய்வு செய்தனா். அப்போது இடையாா் கிராமத்தைச் சோ்ந்த ஜெய்சங்கா் (45), உடையாா்பாளையத்தைச் சோ்ந்த ராஜசேகா் (59) ஆகியோா் தங்களது பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.