அரியலூர்

ஏரியில் இருந்துமுதியவா் சடலம் மீட்பு

9th Jun 2022 02:03 AM

ADVERTISEMENT

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே ஏரியில் மிதந்த ஆண் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

ஜயங்கொண்டத்தை அடுத்த மலங்கன்குடியிருப்பு கிராமத்திலுள்ள ஆலடி ஏரியில் புதன்கிழமை ஆண் சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில், ஜயங்கொண்டம் காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், அவா் மலங்கன்குடியிருப்பு கிராமத்தைச் சோ்ந்த சக்கரவா்த்தி(50) என்பதும், கால் தவறி ஏரியில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிகிறது. எனினும் காவல் துறையினா் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இறந்தவருக்கு வள்ளி என்ற மனைவியும், வினோத் என்ற மகனும், வினிதா என்ற மகளும் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT