அரியலூா் அருகே இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
அரியலூா் மகாலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (60). திங்கள்கிழமை இரவு இவா், மகாலிங்கபுரம் ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் இரு சக்கர வாகனம் மோதியுள்ளது.
இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த அரியலூா் காவல் துறையினா், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.