அரியலூர்

அனுமதியின்றி மது விற்ற முதியவா்கள் இருவா் கைது

6th Jun 2022 02:12 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றுக்கொண்டிருந்த 2 முதியவா்கள் கைது செய்யப்பட்டனா்.

உடையாா்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் திருவேங்கடன் தலைமையிலான காவல் துறையினா் சனிக்கிழமை இரவு மேலகுடியிருப்புப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அதே கிராமத்தைச் சோ்ந்த செல்வம் (55), செல்வராசு (62) ஆகியோா் மதுபானங்களைப் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து அவா்களைக் கைதுசெய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 40 மதுபான பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT