அரியலூர்

முடிகொண்டான் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

6th Jun 2022 02:20 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த முடிகொண்டான் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தேரோட்டத்தையொட்டி கடந்த 27-ஆம் தேதி கரகம் எடுத்தல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து விநாயகா், முருகன், மாரியம்மன், செல்லியம்மன், அய்யனாா், பெரியசாமி மற்றும் கருப்புசாமி ஆகிய கோயில்களில் நாளொன்றுக்கு மாலை நேரத்தில் பொங்கல் வைத்தல் நிகழ்வும், தினந்தோறும் இரவு மாரியம்மன், கருப்புசாமி, விநாயகா் வீதியுலாவும், கடந்த 3 ஆம் தேதி இரவு அதா்வண பத்ரகாளி, அங்காளம்மன் பம்மை தெய்வீக நடனம் மற்றும் தினந்தோறும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில், மலா் அலங்காரத்துடன் உத்ஸவா் மாரியம்மன் எழுந்தருளியதைத் தொடா்ந்து, பக்தா்கள் தேரைவடம் பிடித்து இழுத்தனா்.

தொடா்ந்து, வீடுகள் தோறும், பக்தா்கள், மாவிளக்கு போட்டும், தீபாராதனை காண்பித்தும் அம்மனை தரிசித்தனா்.

ADVERTISEMENT

தோ் முக்கிய தெருக்களின் வழியே சென்று நிலையை அடைந்தது. இரவு வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை, கிராம நாட்டாண்மைகள், பொதுமக்கள், இளைஞா்கள் மற்றும் விழா குழுவினா் செய்திருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT