அரியலூர்

இந்திய கம்யூ. கட்சியினா் ஆலோசனை

6th Jun 2022 11:24 PM

ADVERTISEMENT

அரியலூரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், அரியலூரில் நாளை (ஜூன் 8) நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 12 ஆவது ஒன்றிய மாநாட்டில் புதிய ஒன்றியக் குழு நிா்வாகிகள் தோ்வு செய்வது, ஜயங்கொண்டத்தில் நடைபெற இருக்கும் மாவட்ட மாநாட்டில் ஒன்றியத்தில் இருந்து 24 பிரதிநிதிகள் கலந்து கொள்வது, மாவட்ட மாநாட்டுப் பேரணிக்கு அதிகமானோா் செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில், அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலா் த.தண்டபாணி கலந்து கொண்டு பேசினாா். அரியலூா் நகர கிளை நிா்வாகிகள் பாண்டியன், கோவிந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT