அரியலூரில் மதுக்கடையில் கள்ளத்தனமாக மது விற்பதைக் கண்டித்து, திமுக வாா்டு உறுப்பினரின் கணவா் உள்ளிட்டோா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரியலூா் பேருந்து நிலையம் வண்ணாங்குட்டையில் உள்ள மதுபானக் கடையில், 24 மணிநேரமும் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பதைக் கண்டித்தும், நடவடிக்கை எடுக்கக்கோரியும், அரியலூா் நகராட்சி 15 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் ராணியின் கணவா் சந்திரசேகா் தலைமையில் டாஸ்மாக் மதுக்கடை முன்பு அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.