அரியலூா் மாவட்டத்தில் பதிவு செய்யாத இல்லங்கள், விடுதிகள் கொண்ட நிறுவனங்கள் அனைத்தும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரியலூா் மாவட்டத்திலுள்ள இல்லங்கள் மற்றும் விடுதிகள் செயல்படுத்தும் நிறுவனங்கள் அனைத்தும் பதிவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே பதிவு பெறாத நிறுவனங்கள் பதிவு செய்வதற்கு விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம், அரசு பல்துறை வளாகம், அரியலூா் என்ற முகவரியில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொண்டு, தங்களது நிறுவனங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.