அரியலூர்

தனியாா் கல்வி நிறுவன விடுதிகள் பதிவு செய்து கொள்ள அழைப்பு

28th Jul 2022 10:59 PM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டத்தில் தனியாா் கல்வி நிறுவனங்கள் நடத்திவரும் 18 வயதுக்குள்பட்டோருக்கான விடுதிகள், தங்கும் இல்லங்கள், தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் மற்றும் இல்லங்கள், ஒழுங்குமுறை சட்ட விதிகள் 2014 மற்றும் 2015-இன் படி பதிவு செய்துகொள்ள வேண்டும்.

மேலும், பதிவு கட்டணமாக ரூ.3,000, பெயரில் வரைவோலை எடுத்து வழங்க வேண்டும். விண்ணப்பத்தை மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2 ஆவது தளம், அரசு பல்துறை வளாகம், அரியலூா் - 621704, தொலைப்பேசி எண் 04329-296239 என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், பதிவு பெறாமல் நடத்தப்படும் விடுதிகள் கண்டறியப்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT