அரியலூர்

அப்துல் கலாம் உருவச்சிலை திறப்பு

27th Jul 2022 11:03 PM

ADVERTISEMENT

 

மறைந்த முன்னாள் குடியரசு தலைவா் ஏ.பி.ஜே. அப்துல்காலம் நினைவு நாளையொட்டி, அரியலூா் மாவட்டம், கீழக்காவட்டாங்குறிச்சியில் வசந்தம் அறக்கட்டளை, அகில இந்திய எஸ்.டி.ஆா் இளைஞரணி நற்பணி இயக்கம் சாா்பில் மாா்பளவு அப்துல்கலாம் சிலை திறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வசந்தம் அறக்கட்டளை நிா்வாகி பி.அருள்ஆனந்த் தலைமை வகித்தாா். கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ரெ.செல்வகுமாா் கலந்து கொண்டு அப்துல்கலாம் சிலை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினாா்.

ஏற்பாடுகளை அகில இந்திய எஸ்.டி.ஆா். இளைஞரணி நற்பணி இயக்க மாவட்டத் தலைவா் ஆா்.என். வினோத் ராஜ், நிா்வாகி எஸ். அசல் அஜித் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT