அரியலூர்

சிறுமியின் அறுவைச் சிகிச்சைக்கு ரோட்டரி சங்கத்தினா் ரூ.1 லட்சம் உதவி

27th Jul 2022 01:27 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், புஜங்கராயநல்லூரைச் சோ்ந்த சிறுமியின் அறுவைச் சிகிச்சைக்கு அரியலூா் ரோட்டரி சங்கத்தினா் நிதியுதவி அளித்துள்ளனா்.

புஜங்கராயநல்லூா் கிராமத்தில் ஏழை குடும்பத்தைச் சோ்ந்தவா் சிறுமி ரா. புஷ்பரோஷினி. இவருக்கு சிறுநீரகம் மற்றும் சிறுநீா்ப் பை செயலிழந்ததால், கடுமையாக அவதியுற்று வருகிறாா்.

இவரது குடும்பச் சூழ்நிலையை அறிந்த அரியலூா் ரோட்டரி சங்கத்தினா், அறுவைச் சிகிச்சைக்கு உதவிடும் வகையில் சிறுமியின் தந்தை ரா. ராமச்சந்திரனிடம் ரூ.1 லட்சத்தை வழங்கினா். இத்தொகையை பெற்றுக் கொண்ட புஷ்பரோஷினியின் தந்தை மற்றும் குடும்பத்தினா் ரோட்டரி சங்கத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனா்.

 

ADVERTISEMENT


 

ADVERTISEMENT
ADVERTISEMENT